×

திருப்புத்தூர் பள்ளி ஆண்டு விழா

திருப்புத்தூர், மார்ச் 2:  திருப்புத்தூர் இந்திராகாந்தி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.  பள்ளி நிறுவனர் கணேசன் தலைமை வகித்தார். ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சேதுக்கரசி வரவேற்றார். திருப்புத்தூர் நகர் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தி, மாவட்ட லயன்ஸ் கிளப் சேர்பேர்சன் ஜோதி, இந்திராகாந்தி பள்ளி மேலாளர் பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திருப்புத்தூர் டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

புதுக்கோட்டை முன்னாள் வட்டாட்சியர் பூலாங்குறிச்சி நாகராஜன், கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் என்ற குமார், பிரைமரி நர்சரி பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் பீர்முகமது, பூலாங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவாலை, இந்திராகாந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் ஏகாம்பாள், பள்ளி முதல்வர் செந்தில்குமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

Tags : Thirupputhur School Anniversary ,
× RELATED காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்